Skip to main content

கிராம மக்கள் எதிர்ப்பு: ஆய்வு செய்யாமல் திரும்பிய ஆளுநர்

Published on 22/10/2017 | Edited on 22/10/2017
கிராம மக்கள் எதிர்ப்பு: ஆய்வு செய்யாமல் திரும்பிய ஆளுநர்

புதுவை ஆளுநர் கிரண் பேடிக்கும் அமைச்சர் கந்தசாமிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர்கள் ஆளுநர் கிரண்பேடி மீது கொந்தளிப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் அமைச்சர் கந்தசாமியின் தொகுதியான ஏம்பலத்தில ஆளுநர் கிரண்பேடி நேற்று ஆய்வு நடத்த முடிவு செய்தார். ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள குளத்தையும் நரம்பை கிராமத்தில் ஐ.ஆர்.பி.என். போலீசாருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ஆளுநர் பார்வையிட திட்டமிட்டு இருந்தார். இதனை அறிந்த பிள்ளையார்குப்பம் பேட் மக்களும், பிள்ளையார் குப்பம் கிராம மக்களும் மற்றும் கிருமாம்பாக்கம் பேட், நரம்பை மீனவ பகுதி மக்களும் ஆளுநரை கண்டித்து கோஷம் எழுப்பும் வகையில் பதாகைகளுடன் நின்று கொண்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. 

இதனை ஆளுநர் கிரண்பேடி அறிந்ததும் அந்த பகுதிகளுக்கு செல்லும் முடிவை கைவிட்டு தனது ஆய்வு பயணத்தை பாதியிலேயே முடித்து கொண்டு ஆளுநர் மாளிகைக்கு திரும்பினார்.

சார்ந்த செய்திகள்