வட மாநிலங்களில் கொடூரத்தனமாக தாக்குதல் நடத்தும் காட்சிகள் அவ்வப்பொழுது இணையங்களில், சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாவது தொடர்ந்து நடக்கிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் மீது கட்டவிழ்க்கப்படும் கொடூர தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும். அந்தவகையில் உத்திர பிரதேசம் மாநிலத்தில் பழங்குடியின பெண் ஒருவர் ஆண்களால் கொடூரமாக பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் காட்சிகள் நெஞ்சை உறைய வைக்கிறது.
உத்திர பிரதேசம் மாநிலம் தேவாஸ் பகுதியில் திருமணமான பழங்குடியின பெண் ஒருவர் ஆண் நண்பருடன் பழகியதாக அந்த பகுதி இளைஞர்கள் மற்றும் ஆண்கள் அந்த பெண்ணை நடு வீதிக்கு கொண்டுவந்து கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பெண்ணின் ஆடைகளைக் கிழித்ததோடு, அதேநிலையில் தோளில் இருபுறமும் கால்களை போட்டவாறு கணவனை தூக்கிச்சென்று ஊரை சுற்றிவர வேண்டும் எனத் தண்டனை விதிக்கப்பட்டு அதன்படி கொடூரத்தனமாக நடத்தப்பட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதுபோன்று நிகழும் தாக்குதல் சம்பவங்களினால் வட மாநிலங்கள் அவப்பெயரை பெற்று வரும் நிலையில், 'எத்தனை வளர்ச்சி வந்தாலும் மாறாத வடமாநிலம்' எனப் பலர் இந்த தாக்குதல் வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.