இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய அரசும் மாநிலங்களுக்கு தேவையான கரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன் போன்றவைகளை விமானங்கள் மூலமும், ரயில்கள் மூலமும் அனுப்பி வைத்து வருகிறது.
இந்தியாவில் கோவிட்ஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவிற்கு வந்துள்ளது.முதற்கட்டமாக 1.5 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஹைதராபாத்துக்கு சிறப்பு விமானம் மூலம் வந்துள்ளது. இந்த தடுப்பூசிகள் தெலுங்கானா மாநிலத்தில் விநியோகிக்கப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.