பாஜக ஊழல்வாதிகளை கைது செய்ய
சித்தராமையா ரகசிய உத்தரவு
கர்நாடக மின் துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமாருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உட்பட 39 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கர்நாடக அமைச்சரிடம் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டு பார்லிமென்டிலும் எதிரொலித்தது.
இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள பாஜக ஊழல்வாதிகளின் பட்டியலை தயார் செய்து அப்பட்டியலில் உள்ளவர்களை கைது செய்ய ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளார் அம்மாநில முதல்வர் சித்தராமையா.
-வடிவேல்