Skip to main content

‘எடியூரப்பா நீக்கப்பட்டால் கர்நாடகாவுக்கு சிக்கல்’ - லிங்காயத்து மடாதிபதிகள் எச்சரிக்கை!

Published on 26/07/2021 | Edited on 26/07/2021
ிுர

 

கர்நாடகாவில் எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, வேறு ஒருவரை முதல்வராக்க பாஜக தலைமை திட்டமிட்டு காய் நகர்த்திவருகிறது. இதுதொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன் பேசிய அம்மாநில முதல்வர் எடியூரப்பா, "திங்கள் (26.07.2021) அன்று பாஜக தலைமை தன்னுடைய முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதன் பிறகு என் முடிவை நான் அறிவிக்க உள்ளேன். மாலையில் நிச்சயம் ஒரு பொருத்தமான முடிவை எடுப்பேன்" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதல்வரின் சமூகத்தைச் சேர்ந்த மடாதிபதிகள் மாநாடு பெங்களூரு அரண்மனை மைதானத்தில் ஞாயிறு அன்று நடைபெற்றது. இதில் பேசிய மூத்த மடாதிபதிகள், "எடியூரப்பா நீக்கம் என்ற பேச்சை விட்டுவிட வேண்டும். அவர் நீக்கப்பட்டால் கர்நாடகாவிற்கு சிக்கல் வரும். எனவே பாஜக இந்த முடிவை கைவிட வேண்டும்" என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 
News Hub