குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிக்க சிவசேனா கட்சி முடிவெடுத்துள்ளது.
ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இரு வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களை தொடர்ச்சியாகச் சந்தித்து ஆதரவு கோரிவருகின்றனர். எதிர்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாக சிவசேனா வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய திருப்பமாக திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிக்க சிவசேனா முடிவெடுத்துள்ளது. சிவசேனா எடுத்துள்ள இந்த முடிவானது மகாராஷ்டிராவில் உள்ள மகா விகாஸ் அகாடி கூட்டணியின் நிலைப்பாட்டிற்கு எதிராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் இந்த திடீர் முடிவு எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.