புதிய ரயில்வே வாரிய சேர்மனாக அஷ்வானி லோகானி!
ஏ.கே.மிட்டலின் ராஜினாமாவை அடுத்து, ரயில்வே துறை சேர்மனாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த நிர்வாக இயக்குனர் அஷ்வானி லோகானி நியமிக்கப்படவுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பூரி-ஹரித்வார் இடையே செல்லும் உத்கல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. இதில் 21 பேர் உயிரிழந்தனர். 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்திற்கு பொறுப்பேற்று இரயில்வே துறை அமைச்சர் ரமேஷ் பிரபு மற்றும் ரயில்வே வாரிய தலைவர் ஏ.கே.மிட்டல் ஆகியோர் தாமாக முன்வந்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில், ரயில்வே வாரிய தலைவர் பதவிக்கு அஷ்வானி லோகானி நியமிக்கப்படவுள்ளார்.
இவர் ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த நிர்வாக இயக்குனர் ஆவார். மேலும், ரயில்வே துறைகளில் பல உயர் பதவிகளும் வகித்துள்ளார். உலகிலேயே மிகவும் பழமையான நீராவி லோக்கோமோட்டிவ் எஞ்சினைக் கொண்ட ‘ஃபேரி குயின் எக்ஸ்பிரஸ்’ எனும் ரயிலை இயக்கி, கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
நான்கு பொறியியல் பட்டங்களைப் பெற்றிருக்கும் இவர் நீராவி எஞ்சின்கள் மற்றும் நிர்வாகப்பொறுப்பு குறித்த இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
- ச.ப.மதிவாணன்