Skip to main content

பல்வேறு நாட்டு தலைவர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தும் பிரதமர் மோடி!

Published on 02/11/2021 | Edited on 02/11/2021

 

Narendra Modi

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் பருவநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்றுள்ளார். 120க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றம் தொடர்பாக பல்வேறு முக்கிய விவாதங்கள் நடைபெற உள்ளன. மேலும் முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவுள்ளன.

 

இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாகவும், பசுமை ஹைட்ரஜன், பொருளாதாரம், பாதுகாப்பு போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினார். மேலும், இந்த சந்திப்பின்போது இந்தியாவிற்கு வருமாறு போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதனை போரிஸ் ஜான்சனும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

 

போரிஸ் ஜான்சன் ஏற்கனவே இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இருந்தார். ஆனால், கரோனா பரவல் காரணமாக அவரது இந்திய பயணம் இரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

இதற்கிடையே பிரதமர் மோடி, உக்ரைன், நேபாளம், இஸ்ரேல், சுவிட்சர்லாந்து, பின்லாந்து, மலாவி ஆகிய நாடுகளின் தலைவர்களை தனித்தனியே சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், பில் கேட்ஸையும் பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்