Published on 01/02/2021 | Edited on 01/02/2021
பிரபல இணையதள ஃபேஷன் நிறுவனம் மிந்த்ரா (myntra). இந்த நிறுவனத்தின் லோகோ (logo) பெண்களை அவமதிக்கிற வகையில், ஆபாசமாக இருப்பதாகக் கூறி, சமூக ஆர்வலர் ஒருவர், மும்பை காவல்துறையின் சைபர் - க்ரைம் பிரிவிடம் புகாரளித்தார்.
இதனையடுத்து சைபர் - க்ரைம் அதிகாரிகள், மிந்த்ரா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மிந்த்ரா நிறுவனம், ஒரு மாதத்திற்குள் லோகோவை மாற்றுவதாக உறுதியளித்திருந்தது.
இந்தநிலையில் தற்போது மிந்தரா நிறுவனம், தனது லோகோவில் சிறிய அளவிலான மாற்றங்களைச் செய்துள்ளது. தற்போது அந்த நிறுவனத்தின் இணையதளம், அட்டைப்பெட்டிகள் ஆகியவற்றில் பழைய லோகோ மாற்றப்பட்டு புதிய லோகோ சேர்க்கப்பட்டுள்ளது.