பிரதமர் மோடி நான்கு நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுள்ளார். தற்போது டெல்லியில் இருந்து விமானப் பயணத்தை மோடி துவங்கினார். 'குவாட்' எனப்படும் நான்கு நாடுகள் (அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா) கொண்ட அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க இருக்கும் மோடி, அதற்கு முன்பாக புதிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரை சந்திக்க இருக்கிறார்.
இந்த குவாட் மாநாட்டில் இந்தோ பசிபிக் பாதுகாப்பு, ஆப்கானிஸ்தான் பிரச்சனையில் சீனா, பாகிஸ்தான் நிலைப்பாடு ஆகியவை குறித்து மோடி பேச இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் நாளை (23.09.2021) அமெரிக்க தொழில் நிறுவனங்களின் தலைவர்களை மோடி சந்திக்க இருக்கிறார். ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக், ஜப்பான் பிரதமர் யோஷிண்டே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோருடனும் சந்திப்பு மேற்கொள்ள உள்ளார் மோடி.