Skip to main content

"கடந்த 6 மாதங்களில் ஒரு ஊடுருவல் கூட இல்லை" -உள்துறை அமைச்சகம் தகவல்...

Published on 16/09/2020 | Edited on 16/09/2020

 

mha about border issue with china and pakistan

 

 

கடந்த ஆறு மாதங்களில் இந்திய, சீன எல்லைப்பகுதியில் ஒரு ஊடுருவல் கூட நடைபெறவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இந்தியா- சீனா எல்லைப்பகுதியில் இரு நாட்டு ராணுவவீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 6 மாதங்களில் இந்திய, சீன எல்லைப்பகுதியில் ஒரு ஊடுருவல் கூட நடைபெறவில்லை எனப் பதிலளித்துள்ளது. அதேநேரத்தில், கடந்த 6 மாதங்களில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் மொத்தம் 47 முறை ஊடுருவல் முயற்சி நடைபெற்றுள்ளதாகவும், இதில் அதிகபட்சமாக ஏப்ரல் மாதம் 24 ஊடுருவல் முயற்சி நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

 

அதனைத்தொடர்ந்து, ஜூலை மாதத்தில் 11 முறையும், மே மாதத்தில் 8 முறையும், மார்ச் மாதத்தில் 4 முறையும் ஊடுருவல் முயற்சி நடந்துள்ளதாகவும், ஜூன் மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஊடுருவல் முயற்சி நடைபெறவில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்