கன்னட திரையுலகில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற தொடர் வருமான வரி சோதனை முடிவுக்கு வந்துள்ளது. இதன் முடிவில் 109 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கம், தங்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. கன்னட திரைப்படத்துறையில் உள்ள பல்வேறு தயாரிப்பாளர்கள், நடிகர் வீடுகளில் கடந்த வியாழக்கிழமை முதல் நேற்று வரை வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தயாரிப்பு நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடந்தது. கே.ஜி.எப் பட தயாரிப்பாளர், நடிகர்கள் யாஷ், சுதீப், சிவராஜ் குமார், புனீர் ராஜ்குமார் ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.11 கோடி சொத்துக்கள், ரூ.2.85 கோடி ரொக்கப்பணம், 25.3 கிலோ தங்க நகைகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.109 கோடி என்று வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.