ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்குகளை அடையாளம் கண்டுகொள்ளும் வகையில், அதிகாரப்பூர்வ கணக்கின் பெயருக்குப் பக்கத்தில் ப்ளூ-டிக் வழங்கப்பட்டிருக்கும். இந்தநிலையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட கணக்கிலிருந்து ப்ளூ-டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.
வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட கணக்கிலிருந்து நீக்கப்பட்ட ப்ளூ-டிக் சில மணி நேரங்களில் திருப்பி வழங்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் அலுவலகத்திலிருந்து ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட பிறகு, ப்ளூ-டிக் திரும்ப வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. குடியரசு துணைத் தலைவருக்கான அதிகாரப்பூர்வ கணக்கு தனியே செயல்படுகிறது. அந்தக் கணக்கில் ட்விட்டர் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ட்விட்டர் கணக்கில் இருந்தும் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.