Published on 29/03/2020 | Edited on 29/03/2020
இந்தியாவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 900 கடந்துள்ளது. கரோனாவிற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீடுகளில் இருக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் மாநில அரசுகள் தீவிரம் காட்டிவருகின்றன. இந்நிலையில் டெல்லியில் வாடகைக்கு குடியிருப்போர்களிடம் வாடகை கேட்டு தொல்லை தர கூடாது என்றும், வாடகை செலுத்த இயலாத குடும்பங்களுக்கு அரசே செலுத்தும் என்றும் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.