நடிகர் திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி
இந்தி நடிகர் திலீப்குமார்(94) அடிக்கடி நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க ப்படுகிறார். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், திடீரென நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டார். நேற்று மாலை அவர் லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பின்னர், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.