
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம், இன்று 40வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசோடு இதுவரை 6 முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இதில் ஐந்துகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை திருப்தியளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் 7ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில், இதுவரை 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாகவும், ஒவ்வொரு 16 மணிநேரத்திற்கும் ஒரு விவசாயி உயிரிழப்பதாகவும் பாரதிய கிசான் யூனியன் என்ற விவசாய அமைப்பு அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாரதிய கிசான் யூனியன் அமைப்பு, "இதுவரை போராட்டத்தின்போது 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு 16 மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு விவசாயி உயிரிழக்கிறார். இதற்கு பதில் சொல்ல வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு" என தெரிவித்துள்ளது.