2.5 கிலோ தங்கம் கடத்திவந்தவர் கைது
வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு தங்கத்தை கடத்தி வந்தவரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் இருந்து டெல்லிக்கு வந்த பயணியின் உடமைகளை சோதனையிட்டனர். அப்போது சிகரெட், பர்ஸ் போன்றவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.46 கிலோ எடையுள்ள தங்கம் இருப்பதை கண்டனர். இதன் மதிப்பு சுமார் 72 லட்சம் ஆகும். தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.