Skip to main content

தனக்குத்தானே சூனியம் வைத்த தனசேகரன்!

Published on 22/10/2020 | Edited on 22/10/2020
ddd

 

விருகம்பாக்கம் என்ற தொகுதி உருவான பிறகு நடந்துள்ள இரண்டு தேர்தல்களிலும் தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர் முன்னாள் பகுதிச் செயலாளர் தனசேகரன். இரண்டு முறையுமே தோற்றுத்தான் போனார். மதுரைக்கு அழகிரி-கே.கே.நகருக்கு தனசேகரன் என்பதுதான் பொதுமக்கள் மற்றும் கட்சிக்காரர்கள் மனதில் அவரைப் பற்றிய இமேஜ்.

 

சமீபத்தில், தனசேகரன் வீட்டுடன் இணைந்த அலுவலகத்தில் தட்டச்சாளராக இருந்த பெண்மணிக்கும் அவரது கணவருக்கும் தனசேகரன் வீட்டில் ஏற்பட்ட தகராறில் தனசேகரன் வெட்டுப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பெரும் பரபரப்பானது. இதில் தனசேகரனுக்கு விரலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம்.

 

கவலையுடன் இதனைத் தெரிவிக்கும் கட்சிக்காரர்கள், “ஏற்கனவே அந்தப் பெண்மணிக்கும் இன்னொரு  நபருக்கும் நட்பு இருந்தது குறித்து கணவர் சண்டை போட்டு வந்தார். அந்த நபரும் பெண்மணியும் தனசேகரன் வீட்டுக்குப் பக்கத்தில்தான் குடியிருந்தனர். தனசேகரனின் பாதுகாப்புதான் காரணம் என கணவர் கடுப்பாக இருந்தார். அதன்பின், தனசேகரன் குடும்பத்தினர் ஊருக்குச் சென்ற நிலையில் அலுவலகத்திலும் வீட்டிலுமாக பணிகளைக் கவனித்தார் அந்தப் பெண்மணி. இது பற்றி இரண்டு முறை, தனசேகரனுக்கும் அவரது கணவருக்கும் இரவு நேரத்தில் வீட்டு வாசலில் வாக்குவாதம் ஆனது. அதன்பிறகுதான் பகல் நேரத்தில் நடந்த வாக்குவாதம், அரிவாள் வெட்டு வரை போய்விட்டது” என்கின்றனர் கவலையாக.

 

சி.சி.டி.வி கேமரா பதிவுகள் மூலம் நடந்த போலீஸ் விசாரணையும் தனசேகரனுக்கு எதிராக உள்ளதாம். தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொண்டு, விருகம்பாக்கம் வேட்பாளராகும் வாய்ப்பையும் இழந்துவிட்டார் தனசேகரன் என்கிறார்கள் கட்சியினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்