Published on 25/07/2020 | Edited on 25/07/2020

அதிமுகவில் கூடுதல் தலைமை கழக நிர்வாகிகள், துணை நிர்வாகிகள் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்களாக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திருநெல்வேலி மாநகர் மாவட்டத்தை சேர்ந்த பாப்புலர் வி.முத்தையா, தென்சென்னை வடக்கு மாவட்டம் தியாகராயர் நகரைச் சேர்ந்த நடிகை விந்தியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளராக VPB பரமசிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.