சிவகங்கை மாவட்ட மகளிர் மேம்பாட்டு திட்ட இயக்குநர் அருண்மணியை மாவட்டத்திலுள்ள அமைச்சர் பாஸ்கரனுக்குப் பிடிக்கவில்லை. சிவகங்கைக்கு வந்து ஆறு மாதங்கள் கூட ஆகாத அருண்மணியை, உடனே மாற்ற வேண்டுமென கடிதம் கொடுத்திருக்கிறார் அமைச்சர் பாஸ்கரன்.
உடனே அருண்மணியை வேலைவாய்ப்பு மாநிலத் திட்ட மேலாளராக சென்னைக்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டு, அந்த இடத்திற்கு தருமபுரியிலிருந்த சரவணன் என்பவரை அனுப்பியது அரசு.
சிவகங்கை மாவட்ட மகளிர் மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் நாற்காலி காலியாக இருக்கிறதென்று நினைத்து வந்த சரவணனுக்கு ஏமாற்றம். ஏனெனில் அருண்மணி இன்னும் சிவகங்கையில் பணியில் இருந்தார். இந்த நிலையில் தருமபுரியிலிருந்து வந்த சரவணனிடம், ""ஏம்ப்பா... இன்னும் டியூட்டியில் ஜாயின்ட் பண்ணாமல் என்ன செய்றே? போய் ஜாயின்ட் பண்ணு'' என்று அமைச்சர் செல்போனில் ஆணையிட்டிருக்கிறார்.
""இல்லீங்க சார்... அருண்மணி சாரை இன்னும் இங்கிருந்து ரிலீஸ் செய்யலை... டிரான்ஸ்பரை கேன்ஸல் பண்ணிட்டு இங்கேயே அவரை கண்டினியூ பண்ணப்போறதா கேள்வி. சிலநாள் வெயிட்பண்றேன்'' என்றாராம் சரவணன்.
உடனே மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனை தொடர்புகொண்டாராம் அமைச்சர். மாவட்ட ஆட்சியரோ, ""உங்களுக்கு வளைஞ்சு கொடுக்கலைங்கிறதுக்காக ஆறு மாதம்கூட ஆகாத அவரை மாத்தணுமா? என் வேலையை எப்படிப் பார்க்கணும்னு எனக்குத் தெரியும்''னு பொரிந்து தள்ளிவிட்டாராம் மாவட்ட ஆட்சியர்.