



கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சென்னை அண்ணா சாலை ஆயிரம் விளக்கு பகுதியில் ஹெல்மெட் மற்றும் வாகன சீட் கவர்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார் ரயான் பைசுதீன். தேர்தல் நேரங்களில் ஹெல்மெட் மற்றும் வாகன சீட் கவர்களில் கட்சி சின்னங்களை பொறித்து விற்பனை செய்து வருகிறார்.
''கட்சிக்காரர்கள் விரும்பும் வகையில் இருசக்கர வாகனத்தில் உள்ள சீட் கவர் மற்றும் பெட்ரோல் டேங்க் கவரில் சின்னங்களை வடிவமைத்து தருகிறோம். மேலும் ஹெல்மெட்டுகளிலும் சின்னங்களை வடிவமைத்து தருகிறோம். இதற்கான செலவு குறைந்தபட்சம் ரூபாய் 200ல் இருந்து அதிகபட்சம் ரூபாய் 500 வரை ஆகும்.
வருடத்தின் எல்லா நாட்களிலும் வாடிக்கையாளர்களுக்கு இதனை நாங்கள் செய்து தருகிறோம். தேர்தல் நேரங்களில் கட்சிக்காரர்களின் வருகை அதிகமாக இருக்கும். 20 பேருக்கு மேல் எங்கள் கடையில் வேலை செய்வதால் உரிய நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு சீட் கவர்களை தயார் செய்து கொடுத்துவிடுவோம். வெளியூர்களுக்கும் ஆர்டரின் பேரில் சப்ளை செய்து வருவதாக தெரிவித்தார் நம்மிடம்".