பால் ஹெக்டர் பாண்டியன் என்கிற பி.எச்.பாண்டியன் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. காலத்தில் வானளாவிய அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இருந்தவர். ஆரம்ப காலங்களில் தன் சட்டப்படிப்பின் மூலம் பல வழக்குகளை வெற்றி பெற வைத்த அவரது ஆணித்தரமான வார்த்தைகளும், யாருக்கும் அஞ்சா தைரியமுமே அவரை அ.தி.மு.க. 1972 அக் 17ல் எம்.ஜி.ஆர். தொடங்கிய காலத்தில் அவரிடம் அறிமுகம் கொள்ள வைத்தது. நெல்லை மாவட்டத்தின் சேரன்மகாதேவியிலுள்ள கோவிந்தப்பேரியில் தன்னுடைய தோட்டத்துடன் கூடிய வீட்டில் குடியிருந்து வருபவர் பி.எச்.பாண்டியன்.
எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த நேரத்தில் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். 1977ல் நடத்த தேர்தலில் முதலாக எம்.ஜி.ஆரின் தலைமையில் சேரன்மகாதேவி எம்.எல்.ஏ.வானார். தனது எம்.எல்.ஏ. காலத்தில் தொகுதிக்கு, தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டியதை முறையாகச் செய்து ஒரு எம்.எல்.ஏ.வின் மக்கள் கடமை இது தான் என உணர்த்தியவர். தொகுதியை மேம்பட்ட நகரமாக்கியதோடு கன்னடியன் கால்வாய் பாலம், மக்கள் நலன் பொருட்டு திருமணமண்டபம் போன்ற மக்கள் நலப்பணிகளைச் செய்து அசைக்க முடியாத சக்தியானார். பி.எச்.பாண்டியனின் தைரியம் போர்க்குணம் காரணமாகவே எம்.ஜி.ஆர். அவரை தன் அமைச்சரவையின் சபாநாயகராக்கினார். சபைக்கு நடு நாயகமாகவே செயல்பட்டவர் பாண்டியன். அது சமயம் கலைஞர் எதிர்க் கட்சித் தலைவர். அப்போது எம்.ஜி.ஆரின் சொல் கேட்டு சபா. பி.எச்.பாண்டியன் தி.மு.க.வின் பத்து எம்.எல்.ஏ.க்களை சபையிலிருந்து நீக்கினார். அது சமயம் சபையில் பெரும் கொந்தளிப்பு. அவைகளைச் சமாளித்த சபா.பாண்டியன், இந்த சட்டசபை சபாநாயகரான எனது கட்டுப்பாட்டில் உள்ளது. சபா நாயகருக்கு வானளாவிய அதிகாரம் (ஸ்கை ஹை பவர்) உள்ளது. நான் நீக்கியது நீக்கியது தான். சபா நாயகரின் நடடிவக்கையை நாட்டின் எந்த நீதி மன்றமும் கட்டுப்படுத்த முடியாது என்று எம்.ஜி.ஆர். உட்பட சட்டசபையே வியக்கு மளவுக்கு சட்ட நுணுக்கங்களை முன்னே வைத்தார்.
பி.எச்.பாண்டியனின் இந்த வாதமும், அவரின் நுணுக்கமான சட்டப்பிரிவுகளுமே ஒரு சபாநாயகருக்கு எத்தகைய அதிகாரம் உள்ளது. என்பதை வெளி உலகிற்கு உணர்த்தியது. அந்தப் பெருமையைக் கொண்டவர் பாண்டியன். தி.மு.க. தலைவர் கலைஞடன் கொள்கையில் முரண்பாடிருந்தலும், அவருடன் போனில் பேசுமளவுக்கு நட்பும் கொண்டவர் பாண்டியன். எம்.ஜி.ஆர்.மறைவுக்குப் பின் ஜெ. அணி, ஜானகி அணி என அ.தி.மு.க. இரண்டு அணியானது. அப்போதைய தேர்தலில் ஜானகி அணியில் வென்ற ஒரே எம்.எல்.ஏ. பி.எச்.பாண்டியன். அதுவும் தனது மக்கள் நலத்திட்டம் காரணமாகவே அவர் 2ம் முறை எம்.எல்.ஏ.வாக முடிந்தது. அதன் பின் அணிப் பக்கம் வந்த பாண்டியன் அவரின் முதல் நெல்லை எம்.பி.யானார் நெல்லை எம்.பி. தொகுதி முழுக்க நலத்திட்டங்களைப் பழுதில்லாமல் செய்தவர். பின்பு ‘ஜெ’வுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கட்சியை விட்டு நீக்கப்பட்டார். பிறகு நெல்லை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
சற்று காலத்திற்குப் பிறகு ‘ஜெ’ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். எதையும் தைரியமாகவே பேசும் குணம் கொண்ட பி.எச்.பாண்டியன், ‘ஜெ’வின் நம்பிக்கைக்குரியவரானார். அதனாலேயே 2004ல் அவரின் மனைவி சிந்தியா பாண்டியனை நெல்லை எம்.பி. வேட்பாளராக்கினார் ஜெ. ஆனால் வெற்றி வாய்ப்பு கிட்டவில்லை. இதையடுத்துசிந்தியாபாண்டியன் நெல்லை மனோண்மணியம் சுந்ததனார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக்கினார் ‘ஜெ’.
‘ஜெ’.மறைவிற்குப் பின்பு ஊடகங்களை அழைத்த பி.எச்.பாண்டியன், ஜெயலலிதா சிகிச்சையில் உள்ள முரண்பாடுகளை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது ஓ.பி.எஸ். தலைமையிலான ஒரு அணி உருவானபோது, அந்த அணியில் இணைந்து கட்சி தொடர்பாக பல காரியங்களை முன்னெடுக்க உதவியவர் பி.எச்.பாண்டியன்.
பல்வேறு முரண்பாடிருந்தாலும் அ.தி.மு.க.விற்கு சில விஷயங்களை உணர்த்திய பாண்டியனின் மனைவி சிந்தியாபாண்டியன் 2016ல் மறைந்தார். அட்வகேட் ஜெனரல் அரவிந்த பாண்டியன், எக்ஸ் எம்.பி. மனோஜ்பாண்டியன், டாக்டரான நவீன் பாண்டியன், வினோத்பாண்டியன் என நான்கு மகன்கள், டாக்டர் தேவமணி என்ற மகளும் உள்ளனர்.