Skip to main content

இரண்டு சூரியன்!!! இரண்டு இரட்டை இலை!!!

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

நாடாளுமன்ற தேர்தல் அடுத்தடுத்த கட்டங்களாக தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கின்றன. ஒவ்வொரு கட்சியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்கென ஒரு சின்னத்தை பெற்றிருக்கின்றன. இந்தியாவின் பல்வேறு கட்சிகளில் சில கட்சிகள் ஒரே சின்னத்தை பெற்றுள்ளன. 
 

 symbol



பகுஜன் சமாஜ் தேசிய கட்சிகளில் ஒன்றான இதன் சின்னம் யானை. அதேபோல் அசாமிலுள்ள, அசாம் கனா பரிசத் என்ற கட்சியும் யானை சின்னத்தை கொண்டுள்ளது.
 

மேற்கு வங்கத்திலுள்ள அனைத்திந்திய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சி, மேகாலயாவிலுள்ள ஹில் ஸ்டேட் பீப்பிள் டெமாக்ரடிக் கட்சி, கோவிலுள்ள மஹாராஷ்ட்ரவாதி கோமண்டக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு சிங்கம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 
 

ஜம்மு & காஷ்மீரிலுள்ள ஜம்மு & காஷ்மீர் நேஷனல் பந்தெர்ஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சி, தெலுங்கு தேசம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் இருந்தது. அதை இன்று சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 
 

ஜார்கண்டைச் சேர்ந்த ஜார்கண்ட் முக்தி மோர்சா மற்றும் மஹாராஷ்டிராவிலுள்ள சிவசேனா ஆகிய கட்சிகளுக்கு வில், அம்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பீஹாரிலுள்ள ஜனதா தளம் கட்சிக்கு அம்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 
 

பீஹாரிலுள்ள ராஷ்ட்ரிய லோக் சம்தா கட்சிக்கும், ஆந்திராவிலுள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் சீலிங் ஃபேன் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 
 

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை, கேரளாவைச் சேர்ந்த, கேரள காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ்க்கு இரண்டு இலை, பூக்கள் மற்றும் புற்கள் சேர்ந்த சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
 

திமுகவிற்கு உதய சூரியன் சின்னம் இருப்பதைப்போல, மிசோரத்தை சேர்ந்த ஜோரம் நேஷனல் கட்சிக்கு கதிர்களில்லாத சூரியன் சின்னம் இருக்கிறது.