Skip to main content

2014 - 2019 ஆண்டில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடந்த நிகழ்வுகள் !

Published on 27/03/2019 | Edited on 27/03/2019

இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. இதில் ஒரு அவை மக்களவை "LOK SABHA" மற்றொன்று மாநிலங்களவை "RAJYA SABHA" ஆகும். மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 545 ஆகும். இதில் இரு உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள் ஆவர். மக்களவை உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆவர். ஆனால் மாநிலங்களவை உறுப்பினர்கள் அவரவர் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் ஆவர். இந்த மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்கள் 245 ஆகும். இதில் 12 உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் ஆவர்.

சட்டம் எவ்வாறு உருவாகிறது ?

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கூட்டத்தொடர் ஆண்டுக்கு மூன்று முறை நடைப்பெறும். இதில் மழைக்கால கூட்டத்தொடர் , குளிர்கால கூட்டத்தொடர் , பட்ஜெட் கூட்டத்தொடர் என ஆண்டுத்தோறும் இந்த வகை கூட்டத்தொடர்கள் நடைப்பெறும். ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் குடியரசுத்தலைவர் உரை இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மக்களவையில் ஒரு மசோதா ஆளும் கட்சி அல்லது தனிநபர் உறுப்பினர் கொண்டு வந்தால் அந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். 

 

loksabha



இதில் பெரும்பான்மை வாக்குகளை மசோதாவுக்கு ஆதரவாக உறுப்பினர்கள் அளித்தால் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படும். இதனை தொடர்ந்து மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு உறுப்பினர்கள் ஆதரவோடு நிறைவேற்றப்படும் பட்சத்தில் மசோதா ஆனது சட்டமாக முழு வடிவம் பெறும். பிறகு மேதகு குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக்கப்படும். இதுவே சட்டத்தை உருவாக்கும் வழிமுறை ஆகும். அதே போல் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறி மாநிலங்களவையில் தோல்வி அடைந்தால்  மசோதா ஆனது சட்டமாக முழுவடிவம் பெற இயலாது. 

இதற்கு பதிலாக மக்களவையில் நிறைவேறிய மசோதாவை ஆளுங்கட்சி உதவியுடன் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் குடியரசுத்தலைவர் ஒப்புதல் உடன் நடைமுறைப்படுத்தலாம். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களின் வகைகள் ( Ordinary Bill - சாதாரண மசோதா) , (Financial Bill- நிதி மசோதா), (Constitutional Amendment Bill - அரசியலமைப்பு திருத்தம் மசோதா) , ( Money Bill ), (Ordinance Replacing Bill ) உள்ளிட்ட மசோதாக்கல் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

மக்களவை (LOK SABHA) :

2014 - 2019 வரை மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்களின் எண்ணிக்கை (BILL INTRODUCED IN LOK SABHA).

1.ORDINARY BILL-550
2.CONSTITUTIONAL AMENDMENT BILL-6
3.FINANCIAL BILL-745
4.MONEY BILL-88
5.ORDINANCE REPLACING BILL-0
அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்களின்
மொத்த எண்ணிக்கை :  "1389" .

2014-2019 வரை மக்களவையில்  நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள மசோதாக்களின் எண்ணிக்கை .
(BILL PENDING IN LOK SABHA).
1.ORDINARY BILL -447.
2. CONSTITUTIONAL AMENDMENT BILL -0.
3. FINANCIAL BILL-682.
4. MONEY BILL-2.
5. ORDINANCE REPLACING BILL-0.

நிலுவையில் உள்ள மசோதாக்களின் எண்ணிக்கை : "1131".

2014- 2019 வரை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் எண்ணிக்கை ( BILL PASSED IN LOK SABHA ).

1.ORDINARY BILL-91.
2.CONSTITUTIONAL AMENDMENT BILL-6.
3.FINANCIAL BILL-56.
4.MONEY BILL-86.
5.ORDINANCE REPLACING BILL-0.

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் மொத்த எண்ணிக்கை : "239".

மாநிலங்களவை (RAJYA SABHA)

2014-2019 வரை மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட மசோதாக்களின் எண்ணிக்கை  (BILL INTRODUCED IN RAJYA SABHA).

1.ORDINARY BILL-239.
2.CONSTITUTIONAL AMENDMENT BILL-11.
3.FINANCIAL Bill-0.
4.MONEY BILL-0.
5.ORDINANCE REPLACING BILL-0.

அறிமுகம் செய்யப்பட்ட மொத்த மசோதாக்களின் எண்ணிக்கை : "250".

2014-2019 வரை மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள மசோதாக்களின் எண்ணிக்கை.

(BILL PENDING IN RAJYA SABHA).
1.ORDINARY BILL-162.
2.CONSTITUTIONAL BILL-9.
3.FINANCIAL BILL-0.
4.MONEY BILL-0.
5.ORDINANCE REPLACING BILL-0.

நிலுவையில் உள்ள மொத்த மசோதாக்களின் எண்ணிக்கை : "171".

2014-2019 வரை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் எண்ணிக்கை (BILL PASSED IN RAJYA SABHA ).

1.ORDINARY BILL-11.
2.CONSTITUTIONAL AMENDMENT BILL-0.
3.FINANCIAL BILL -0.
4.MONEY BILL -0.
5.ORDINANCE REPLACING BILL-0.

மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மொத்த மசோதாக்களின் நிலை : "11".

இது போன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடர்பான மேலும் பல தகவல்களுக்கு இணையதள முகவரி : https://loksabha.nic.in/ சென்று அறியலாம். இந்த இணையதளத்தில் உறுப்பினர்களின் செயல்பாடுகள் மற்றும் புதிய சட்டம் தொடர்பான அறிவிப்பு , Gazette Notifications உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். இதை மக்கள் அனைவரும் எளிதாக அறியலாம். அதே போல் மசோதா நிறைவேற்றப்பட்டதா ? இல்லையா ? என்பதையும் இணையதளம் மூலம் அறியலாம். இதற்கான இணையதள முகவரி : http://164.100.47.194/Loksabha/Legislation/NewAdvsearch.aspx ஆகும்.


பி.சந்தோஷ் , சேலம் .