Skip to main content

”நாசர் பற்றி இதை வெளில சொல்லலாமான்னு தெரியல...” - யூகி சேது சொன்ன விசயம், அதிர்ந்து சிரித்த அரங்கம்

Published on 17/03/2022 | Edited on 17/03/2022

 

Yugi Sethu talk about nassar

 

தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் விஜித் பச்சான் நடிப்பில் உருவாகியுள்ள படம் டக்கு முக்கு டிக்கு தாளம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடிக்க, முனீஸ்காந்த், மன்சூர் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தரண்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் தங்கர்பச்சான், விஜித் பச்சான் உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர்கள் வெற்றிமாறன், கஸ்தூரி ராஜா, பேரரசு, நடிகர்கள் நாசர், யோகி சேது ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது விழாவில் நாசர் குறித்து பேசிய யூகி சேதுவின் பேச்சு அரங்கத்தினரை சிரிக்க வைத்தது.  

 

யூகி சேது பேசுகையில், "எல்லோரையும் பேசவிட்டு கடைசியா என்ன கூப்டு டைம் இல்லன்னு அனுப்பிருவாங்கன்னு நினைச்சேன். ஏன்னா எல்லாரும் பேசும்போது  வாட்ச்ச பாப்பாங்க. ஆனா நான் பேசும் போது காலண்டரை பாக்கணும். எல்லாருக்கும் வணக்கம், நானும், தங்கரும் க்ளாஸ்மேட். அவன் ஒளிப்பதிவுல தங்கப்பதக்கம் வாங்கிருக்கான், நான் இயக்கத்தில் தங்கப்பதக்கம் வாங்கியிருக்கேன்.  நானு, தங்கர்பச்சான், நாசர் மூணு பேரும் என்னோட ஆபிஸ்லதான் தங்கியிருப்போம். அப்பப்போ ரகுவரன் வந்துட்டு போவாரு. இதை சொல்லலாமான்னு தெரியல. நாங்கெல்லாம் எங்க ஜட்டி பனியனை கொடியில் காயப்போடுவோம், ஆனால் நாசர் மட்டும் அவரோட அண்ட்ராயரை 20 அடி நீளமுள்ள கொடியில் தான் காயபோடுவார். அது ரொம்ப பெருசா இருக்கும், கவனமாக பாதுகாத்து வச்சிருப்பாரு. இந்த தங்கர் என்ன பண்ணுவாருன்னா பத்தரகோட்டையில இருந்து கிலோ கிலோவா முந்திரிக்கொட்டை வாங்கிட்டு வந்து சாப்டு சேதுனு சொல்லுவார். இதுல பார்த்தீங்கன்னா இவன் சின்ன வயசுல இருந்து தன்னோட மாமா பொண்ண டாவடிச்சு கல்யாணம் பண்ணிகிட்டான். அதேபோல் நாசரும் ஒரே பொண்ணதான் காதலிச்சாரு, அவங்களையே கல்யாணமும் பண்ணிகிட்டாரு. ஆனால் முந்திரிகொட்டைய மட்டும் என்கிட்ட கொடுத்துடுங்க. அதனால என் வாழ்க்கையில ஏதும் தவறு பண்ணிருந்தா அதுக்கு காரணம் இந்தப் பத்தரக்கோட்டை முந்திரின்னு தான் சொல்லுவேன். இதுல வெங்காயம் வேற அதிகம் சாப்பிடு சேதுன்னு தங்கர் சொல்லுவார். அப்பேற்பட்ட தங்கர் பெற்றதுதான் இந்த விஜித். என்ன ஒரு விசித்திரமான பெயர்ல. அவரோட சிரிப்பை பாருங்க தங்கர்பச்சான மாதிரியே இருக்கும். நாங்கெல்லாம் ஒரு இடத்துல இருக்கும் போது ஒரே சிரிப்பா இருந்ததுன்னா அங்க தங்கர் இருக்கான்னு அர்த்தம்.  ஒரு பைசா பெறாத விஷயத்தைக்கூட பேசும் விதத்திலேயே எல்லாருக்கும் சிரிப்பை வர வைக்கக்கூடிய மாபெரும் நடிகர் தங்கர். ஒரு மேட்டரும் இல்லாம சிரிக்க வைக்கக்கூடிய தகுதி தங்கருக்கு உண்டு. ஒரு மேட்டர்ல சிரிக்க கூடிய தகுதி எஸ்.ஜே சூர்யாவுக்கு மட்டுமே உண்டு. நாமெல்லாம் அப்படி சிரிச்சா போலீஸ் புடிச்சிட்டு போயிடுவாங்க. நாய் குரைக்கும். தங்கரிடம் இருக்கும் அதே சிரிப்பு விஜித்கிட்ட இருக்கு. அவரின் வெற்றிக்கு சிரிப்பு மட்டுமே போதும் என்று நம்புகிறேன். ஒருவேளை சிரிச்சிட்டே இருடா விஜித்து எவனும் கவனிக்கமாட்டானு தங்கரு கத்துக்கொடுத்த டெக்னீக்கா இருக்கும்" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்