Skip to main content

மேடையில் ரஜினியை கிண்டல் செய்த யுகபாரதி!

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

விமல் - வரலக்ஷ்மி இணைந்து நடித்துள்ள படம் ‘கன்னி ராசி’. பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்துள்ளார். 'தர்மபிரபு' புகழ் எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கவிஞர் யுகபாரதி கலந்துக் கொண்டு ரஜினி கருத்து குறித்து பேசியபோது....

 

yugabharathi

 

‘கன்னிராசி படத்தை ஒரு தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பதை விட ஒரு பத்திரிகையாளர் தயாரித்த படம் என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் நிறைய பத்திரிகைகளில் வேலை செய்துள்ளார். இந்த படத்தை பொறுத்தவரை சொல்வதற்கு நிறைய உள்ளது. ஆனால் இதையெல்லாம் சொல்லமுடியாத சூழலில் தற்போது தமிழ் சினிமா உள்ளது. இப்படத்தில் வரும் கொலு பாடலில் சிலைகளுக்கு நடுவே பெரியார் சிலையை இயக்குனர் முத்துக்குமார் வைத்துள்ளார். அவருடைய நோக்கம் என்ன என்பது இரண்டு நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் பேசியதற்கும், விஜய் சேதுபதி பேசியதற்கும் அர்த்தமாக இது பார்க்கப்படுகிறது. இதுதான் இப்படத்தினுடைய முக்கியமான அம்சம். விமல், வரலக்ஷ்மி அல்லது முத்துக்குமார் ஆகியோரில் ஒருவர் விஜய் சேதுபதி பேசியது மாதிரியான கருத்தை பேசுவார்கள் என நம்புகிறேன். முத்துக்குமார் ஏற்கனவே தர்மபிரபுவில் இம்மாதிரியான கருத்துக்களை பேசி நிறைய பேச்சக்களை வாங்கியுள்ளார். 

 

 

இது முழுக்க முழுக்க குடும்பப் பாங்கான காமெடி திரைப்படம். இப்படத்தில் இயக்குநர் ஒரு அற்புதமான கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதாவது காதலித்து தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்ற உயரிய கருத்தைச் மக்களுக்கு சொல்லிருக்கிறார். நான் இந்த நேரத்தில் இது மிக சிறந்த படம். இதற்கு தேசிய விருது கிடைக்கும் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஏனென்றால், நீங்கள் ஆகச்சிறந்த படங்கள் எடுத்தாலும் நிச்சயமாக இன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காது. இன்றைய சூழல் அப்படி. எனவே தயாரிப்பளார்களும், இயக்குனர்களும் இதுபோன்ற வெற்றிபெறக்கூடிய நல்ல காமெடி படங்களை எடுத்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தேசிய விருதில் தமிழ் படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கலைஞர்களுக்கு சமூக பொறுப்பு இருக்க வேண்டும். அதேபோல் எல்லோரும் சொல்லவேண்டும், நாம் கிருஷ்ணர், அர்ஜுனரை பற்றி பேசாமல் தமிழ் திரையுலகிற்கு எதாவது நல்லது நடக்கவேண்டும் என்பதற்காக முக்கியமான நடிகர்கள், கலைஞர்கள், தமிழ் திரையுலகை காக்க நினைப்பவர்கள் உட்பட அனைவரும் இந்த தேசியவிருது அறிவிப்பு குறித்த விழிப்புணர்வை பற்றி பேசவேண்டும் என்று நினைக்கிறேன்'' என்றார். சமீபத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து ரஜினி மேடையில் பேசும்போது... 'மோடி, அமித்ஷாவை கிருஷ்ணன், அர்ஜுனன்' என பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்