கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டில் அனைத்து தியேட்டர்களும் மீண்டும் மூடப்பட்டன. மறுஉத்தரவு வரும்வரை தியேட்டர்களைத் திறக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ரிலீசுக்குத் தயாராக உள்ள புதிய படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல்வேறு புதிய படங்கள் ஓடிடியில் வெளியாகிவருகின்றன.
இதற்கிடையே, விரைவில் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான சூழல்கள் நிலவினாலும், மக்களின் வருகை எந்த அளவிற்கு இருக்கும் என்பது குறித்து திரைத்துறையினர் மத்தியில் பெரும் சந்தேகம் நிலவிவரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. மேலும், இதுகுறித்து நடந்த பேச்சுவார்த்தையில் அரசுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் திரையரங்குகள் திறப்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.