Skip to main content

பெற்றோரை இழிவுபடுத்தி காமெடியா? நடிகர் விவேக் விளக்கம்...

Published on 17/11/2020 | Edited on 17/11/2020

 

vivek

 

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக். இவர், நடிகராக மட்டுமின்றி  சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 'பசுமை கலாம்' திட்டத்தின் மூலம் மரக்கன்றுகளை நட்டு வரும் விவேக் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

 

இந்த நிலையில், ரசிகர் ஒருவர், 'ரன்' படத்தில் வரும் "சாதா காக்காவ சொன்னா, அண்டங் காக்காவுக்கு கோபம் வருது" எனும் காமெடி காட்சியின் டிக்டாக் வீடியோவை பதிவிட்டு, விவேக்கை டேக் செய்திருந்தார். அதில் இன்னொரு ரசிகர், விவேக்கின் மீது பெரும் மதிப்பு இருப்பதாகவும், ஆனால் இது போன்று பெற்றோர்களை இழிவு செய்யும் காட்சிகளை சகித்துக் கொள்ள முடியவில்லை எனவும் கூறியிருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து, விவேக் அந்த ரசிகருக்குப் பதிலளித்துள்ளார். அதில், பெற்றோரை இழிவுபடுத்தினால் அவலநிலை ஏற்படுமென்பதையே முடிவு கருத்தாக, அந்த நகைச்சுவை காட்சிகள் தெரிவிப்பதாக விவேக் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக விவேக் தனது பதிலில், "பெற்றோரை இழிவுபடுத்திய காரணத்தால் கடைசியில் கூவத்தில் விழுந்து, ஒரு கிட்னி இழந்து, தெருவில் குஷ்ட ரோகி பிச்சைக்காரனுடன் படுத்துக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டது. இதுவே முடிவு கருத்து" எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்