Skip to main content

மாஸ் காட்டும் விஸ்வாசம் ட்ரைலர்... படக்குழு அறிவிப்பு !

Published on 29/12/2018 | Edited on 29/12/2018
viswasam

 

 

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்து அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியிருக்கும் 'விஸ்வாசம்' படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக தயாராகி வரும் நிலையில் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல பெற்று வரும் நிலையில் இப்படத்திற்கு தணிக்கைக் குழுவில் `யு' சான்றிதழை பெற்றுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் ட்விட்டரில் அதிகாரப்பூர்மாக அறிவித்தது.  மதுரை பின்னணியில் உருவாகும் இப்படத்தில் அஜித் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இதற்கிடையே பொங்கலுக்கு வெளியாகவுள்ள மற்றொரு படமான ரஜினியின் 'பேட்ட' படத்தின் டீசரும், டிரைலரும் சமீபத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை குஷிப்படுத்திவரும் நிலையில் 'விஸ்வாசம்' படத்தின் டீசர் எப்போது ரிலீசாகும் என்று அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் எடிட்டர் ரூபன் தன் ட்விட்டர் பக்கத்தில், 'கொல மாஸாக ஒரு டிரைலர் வருது. விஸ்வாசம் டிரைலர் விரைவில்..' என்று தற்போது பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்