Skip to main content

சினிமா ஸ்ட்ரைக் வாபஸ்.... விஷால் போட்ட புதிய ட்வீட் 

Published on 18/04/2018 | Edited on 19/04/2018
vishal


பட அதிபர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் தொடர்ந்து 49 நாட்கள் செய்து வந்த வேலை நிறுத்தம் காரணமாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக நடிகரும், தயரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் நேற்று அறிவித்திருந்தார். மேலும் பேச்சுவார்த்தையில் திரைஉலக பிரச்சினைகள், தியேட்டர் அதிபர்களின் கோரிக்கைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், தியேட்டர்களில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான கட்டணத்தை குறைப்பது, டிக்கெட் விற்பனையை கணினி மயம் ஆக்குவது, கேளிக்கை வரி குறைப்பு தொடர்பாக பேசிய அனைத்திலும் உடன்பாடு ஏற்பட்டதாகவும், மேலும் வேலைநிறுத்தத்தை திரும்பப்பெறுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்த விஷால் தற்போது இது குறித்து புதிய ட்வீட் ஒன்றை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்..."தமிழ் சினிமாவில் ஒரு மாதத்ததுக்கு மேலாக நடந்து வந்த சீரமைப்பு முடிவுக்கு வந்தது. படங்கள் விரைவில் திரைக்கு வரும். டிஜிட்டல் சேவையில் இ-சினிமா 50 சதவீத விலையை குறைத்துள்ளது. டி சினிமாவுடனும் விரைவில் ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறோம். ஜூன் முதல் டிக்கெட் விற்பனை கணினி மயமாக்கப்படும், மேலும் சினிமா டிக்கெட்டுகள் இணையதளத்திலேயே விற்பனை செய்வது குறித்தும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு அளித்த பெப்சி நிறுவனம் மற்றும் ஆர்.கே செல்வமணி சாருக்கு நன்றி, தமிழ் சினிமாவுக்கு நன்றி. தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு சார், வீரமணி சாருக்கு நன்றி. தமிழ் சினிமாவிற்கு இனி நல்ல நேரம் ஆரம்பம். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" என பதிவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்