Skip to main content

அகோரியை பாராட்டிய விஷால் 

Published on 05/01/2019 | Edited on 05/01/2019
vishal

 

ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து தயாரிக்கும் படம் 'அகோரி'. அறிமுக இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார் இயக்கும் இப்படத்தின் டீசரை இன்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மற்றும் நடிகர் சங்க செயலாளருமான நடிகர் விஷால் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். டீஸரைப் பார்த்த விஷால் படம் பற்றியும் படக்குழுவினர் பற்றியும் விசாரித்து அறிந்தவர் இது ஒரு வித்தியாச முயற்சியாக இருப்பதாகத் தான் நம்புவதாகக் கூறியதுடன் படக் குழுனரை வாழ்த்தினார். சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை, இது ஒரு முழுமையான ஆக்ஷன் த்ரில்லர், காமெடி, காதல், சென்டிமெண்ட் எல்லா அம்சங்களும் உள்ள படம். 

 

 

இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகர் சாயாஜி ஷிண்டே இதில் அகோரியாக நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னை பிலிம் சிட்டியில்  பிரம்மாண்டமான ஹரிதுவார் செட் அமைத்து 150 அகோரிகளுடன்  நடித்த காட்சி படமாக்கப்பட்டது. இப்படத்திற்காக கேரளா காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு 200 அகோரிகள் நடிக்கும் காட்சிகளும் படமாகியுள்ளன. தெலுங்கில் 'சஹா' படத்தின் மூலம் புகழ் பெற்ற சகுல்லா மதுபாபு தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார்.  மைம் கோபி, சித்து,  டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, கலக்கப்போவது யாரு சரத், டிசைனர் பவன், ஆகியோருடன் கூத்துப்பட்டறை பயிற்சி பெற்ற புதிய கலைஞர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் பட வசனத்தை தயாரிப்பாளர் ஆர்.பி பாலா எழுதியுள்ளார். 'அகோரி' படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிஷ்யன் மரணம்... விசித்திர பூஜைகள் நடத்திய அகோரிகள்!

Published on 06/10/2021 | Edited on 06/10/2021

 

 Agoris who performed strange pujas

 

திருச்சி மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கேரள மாநிலத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். நேற்று (05.10.2021) அவரது குடும்பத்தினர் அவருடைய உடலை தகனம் செய்ய இடுகாட்டிற்கு கொண்டுவந்தனர். அப்போது அரியமங்கலம் இடுகாட்டில் வழிபாடு செய்து பிரதிஷ்டை செய்யும் அகோரி மணிகண்டன் மற்றும் அவர்ரது பக்தர்கள் உடல் முழுவதும் திருநீறு அணிந்து இடுகாட்டில் இருந்தனர். உறவினர்கள் இறுதிச்சடங்கை முடித்த பின்பு, மணிகண்டன் உள்ளிட்டவர்கள் சடலத்தின் முன் ஆசனம் செய்தும், சடலத்தைச் சுற்றி நின்றவாறும் மந்திரங்களை ஓதி பூஜை செய்துள்ளனர். வெங்கடேசன், அகோரி மணிகண்டனுக்கு சிஷ்யராக இருந்ததால் அவருடைய ஆத்மா சாந்தி அடைய இந்த சிறப்பு பூஜை நடைபெற்றதாக கூறியுள்ளனர்.

 

 

Next Story

நடிகர் சங்க தேர்தலின் வாக்குகளை எண்ணலாமா? அல்லது மறுதேர்தல் நடத்தலாமா? -பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

highcourt chennai


நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் வாக்குகள் எண்ணப்படாத நிலையில் இது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் மறு தேர்தல் நடத்தலாமா? அல்லது வாக்கை எண்ணலாமா? என்பதை வழக்கின் மனுதாரர்களின் இருதரப்பும் பேசி முடிவெடுத்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

 

இந்த வழக்கில் கடந்த ஆண்டு தேர்தலுக்கு 30 லட்சம் செலவானது. எனவே மறுதேர்தல் சாத்தியமற்றது எனக் கூறிய விஷால் தரப்பு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண உத்தரவிட வேண்டும் என வாதிட்டது. தேர்தலை தனி நீதிபதி ரத்து செய்துள்ளதால் நியாயமாக மறு தேர்தல் நடத்த தயார் என ஏழுமலை தரப்பு வாதம் செய்தது.

 

இந்நிலையில் நடிகர் சங்கதிற்கு மறு தேர்தல் நடத்துவதா? அல்லது நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதா? என நடிகர் விஷால் தரப்பும், ஏழுமலை தரப்பும் செப்டம்பர் 24 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.