சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என பிஸியாக இருந்தவர் விஷால். இதன் பின் சங்க பிரச்சனைகள் போன்ற விவகாரங்களால் எந்த பொறுப்புமின்றி மீண்டும் நடிப்பதில் ஆர்வம் கான்பித்து வருகிறார். இரும்புத்திரை படத்திற்கு பிறகு அவருடைய நடிப்பில் வெளியான எந்த படமும் பெரிதாக சோபிக்கவில்லை.
இதில் சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னாவுடன் விஷால் இணைந்து நடித்த ஆக்ஷன் படம், காண்போர் அனைவரையும் கலங்கடித்தது. அந்தளவிற்கு மிகவும் தூசு தட்டப்பட்டு, லாஜிக்கின்றி எடுக்கப்பட்ட படம் என்று விமர்சனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆக்ஷன் படம் கடந்த மாதம் யூ-ட்யூபில் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான இரு மாதத்திலேயே சுமார் 8 கோடிக்கும் மேலான பார்வையாளர்கள் படத்தை பார்த்திருப்பது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது.
பொதுவாகவே யூ-ட்யூபில் தென்னிந்திய மசாலா படங்களுக்கு இந்தி டப்பிங்கின் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அல்லு அர்ஜுனின் ஒவ்வொரு படமும் இந்தி டப்பிங்கில் வெளியாகும்போது பல கோடி பார்வையாளர்கள் பார்த்து சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் விஷாலின் மசாலா வகையறா ஆக்ஷன் படம் தமிழில் சோபிக்கவில்லை என்றாலும் இந்தி டப்பிங்கில் பெரிதாக வெற்றியடைந்துள்ளது.