Skip to main content

மாதவனாக மாறிய சயிஃப் அலிகான்... கவனம் ஈர்க்கும்  ஃபர்ஸ்ட் லுக் 

Published on 24/02/2022 | Edited on 24/02/2022

 

vikram vedha Saif AliKhan first look poster released

 

புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம் 'விக்ரம் வேதா'. இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சசிகாந்த் தயாரித்திருந்தார். தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரியே இந்தியிலும் இயக்குகின்றனர். 

 

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கில் வேதாவாக ஹ்ரித்திக் ரோஷனும், விக்ரமாக சயிஃப் அலிகானும் நடித்துவருகின்றனர். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று  சமீபத்தில் வேதா கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் தற்போது விக்ரம் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மாதவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சயிஃப் அலிகானின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரின் கவனத்தை பெற்று வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்