![vikram kumar](http://image.nakkheeran.in/cdn/farfuture/6CN232CNk5G-gz_EppNo1UbO0NbwAYMs_6Q0nszHj6Q/1598860161/sites/default/files/inline-images/vikram-kumar.jpg)
பிரபல இயக்குனர் விக்ரம் குமார் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
யாவரும் நலம், இஷ்க், மனம், 24 உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்ரம் குமார். அடுத்து எந்த மொழியில் யாரை வைத்து இயக்கப்போகிறார் என்று பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
கடந்த வருடம் அவரது இயக்கத்தில் நானி நடிப்பில் உருவான கேங் லீடர் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தன்னுடைய அடுத்த படம் நாக சைத்தன்யாவுடன் தான் என்று அண்மையில் ஒரு பேட்டியில் உறுதி செய்தார்.
இந்நிலையில் தனது தந்தை நாகாஅர்ஜுனாவின் பிறந்தநாளின்போது இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தில் ராஜு தயாரிக்கவுள்ள இந்த படத்தை விக்ரம் குமார் இயக்கவுள்ளார். 'தேங்க் யூ' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாக சைத்தன்யாவுடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பதைப் படக்குழு அறிவிக்கவில்லை. விரைவில் நடிகர்கள் தேர்வை முடித்து, படப்பிடிப்புக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறது படக்குழு.