Skip to main content

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கிய சியான் விக்ரம்

Published on 21/11/2018 | Edited on 21/11/2018
vikram

 

 

 

கஜா புயல் தாக்கியதில் தமிழக டெல்டா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை திரையுலகை சேர்ந்த நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சமும், விஜய் சேதுபதி ரூ.25 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும், ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பில் ரூ.50 லட்சமும், வைரமுத்து சார்பில் ரூ.5 லட்சமும், விஜய் ரசிகர் மன்றம் சார்பாக ரூ.6.5 லட்சமும், லைகா நிறுவனம் சார்பில் ரூ.1,01,00,000 நிவாரணம் வழங்கியுள்ளனர். இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்காக நடிகர் சீயான் விக்ரம் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் ரூபாய் ஆன்லைன் (RTGS) மூலம் இன்று வழங்குகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேங்காய் சிரட்டை மாலையுடன் போராடிய தேமுதிக

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

dmdk who fought wearing a garland of coconuts

 

கஜா புயல் புரட்டிப்போட்ட பிறகு தமிழக விவசாயிகளால் இன்னும் எழ முடியவில்லை. இதனால் ஒட்டுமொத்த விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் முடங்கி 5 ஆண்டுகள் ஆகிறது.

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரதான விவசாயம் தென்னை. அதைச் சார்ந்து தென்னையிலிருந்து உப பொருட்களை தயாரிக்கும் நூற்றுக்கணக்கான சிறு குறு தொழில்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெரும் வணிகமும் நடந்தது. கஜா புயலுக்கு தென்னை மரங்கள் அழிந்ததோடு, அதனைச் சார்ந்த தொழில்களும் நலிவடைந்ததால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.

 

இதனால் தேங்காய் விலையும் வீழ்ச்சியடைந்து, தென்னை விவசாயிகள் மேலும் மேலும் கடனாளிகளாகி வருகின்றனர். இந்நிலையில், தேங்காய் விலையை உயர்த்த வேண்டும். அரசே தேங்காய் கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றும் ஆங்காங்கே தேங்காய் உடைப்பு கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளத்தில், மாவட்ட தேமுதிக சார்பில் நடந்த தேங்காய் உடைப்பு போராட்டத்தை மாவட்டச் செயலாளர் மன்மதன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் தேங்காய் சிரட்டைகளை மாலையாக கோர்த்து கழுத்தில் போட்டுக் கொண்டு கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிவில் தேங்காய்களை சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

Next Story

நடிகர் விக்ரமின் உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம்!

Published on 08/07/2022 | Edited on 08/07/2022

 

Hospital explanation about actor Vikram's health!

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரமிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரமிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் விரைவில் விக்ரம் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 

விக்ரம் உடல்நலம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகிய நிலையில் அவரின் மேலாளர் சூர்யநாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு, சியான் விக்ரமிற்கு லேசான மார்பு அசௌகரியம் இருந்தது. இது தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. விக்ரம் தற்போது நலமாக இருக்கிறார். இன்னும் ஒரு நாளில் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்நிலையில் அவர் சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவலை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், அவர் நலமுடன் உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளது.