![vikram condolence message to ajith father passed away](http://image.nakkheeran.in/cdn/farfuture/SSKlDz2PmJkR6GaaWYuqbdREogRYqTw4oz1yLuGVqGE/1679651586/sites/default/files/inline-images/286_10.jpg)
நடிகர் அஜித் குமாரின் தந்தை மணி என்கிற சுப்ரமணியன் (85) காலமானார். கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. தந்தை மறைவால் சோகத்தில் இருக்கும் அஜித் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு பலரும் நேரில் சென்றோ அல்லது சமூக ஊடகங்களில் பதிவிட்டோ ஆறுதல் கூறி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில், "தம்பி அஜித் குமாரின் அப்பா சுப்பிரமணியம் மறைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விக்ரம், "அஜித், அவரது தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவருடைய அப்பாவின் இழப்பு.. குறிப்பாக சுப்ரமணியம் மாமாவைப் போல அக்கறையுடனும் இனிமையாகவும் இருக்கும் ஒருவரை ஈடுகட்ட முடியாது. உறுதியாக இருங்கள் அஜித்." என ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விஜயகாந்த், "நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனையடைந்தேன். தந்தையை இழந்து வாடும் சகோதரர் அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
My heartfelt condolences to Ajith, his mother and family. The loss of one’s dad .. especially someone as caring and sweet as Subramaniam uncle can never be compensated. May his soul rest in peace. Stay strong Ajith. pic.twitter.com/eY081S4WQG— Vikram (@chiyaan) March 24, 2023