Skip to main content

ரசிகர்களின் பரிந்துரை ; படத்தில் மாற்றம் செய்த 'கோப்ரா' படக்குழு

Published on 01/09/2022 | Edited on 01/09/2022

 

vikram cobra movie trimmed by 20 minutes - team released notice

 

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'கோப்ரா' படம் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட 5 மொழிகளில் நேற்று (31.08.2022) திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக படத்தின் நீளம் சற்று அதிகமாக உள்ளதாகவும், அதை குறைத்தால் நன்றாக இருக்கும் எனவும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து கூறி வந்தனர். 

 

இந்நிலையில் ரசிகர்களின் கருத்தை ஏற்று 'கோப்ரா' படக்குழு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "திரைப்பட பார்வையாளர்கள் பரிந்துரைத்தபடி கோப்ரா படம் இப்போது 20 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளது. இப்போது தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளிலும் இன்று மாலையில் இருந்து கோப்ரா படத்தின் டிரிம் செய்யப்பட்ட பதிப்பு ஒளிப்பரப்படும். திரையரங்குகளில் பார்த்து ஆதரவளிக்கவும்" என குறிப்பிட்டுள்ளனர். 

 

 


 

சார்ந்த செய்திகள்