Skip to main content

''இது எங்கு வெளியாகிருந்தாலும் சூப்பர்ஹிட்!'' - இயக்குனர் விக்னேஷ் சிவன் பாராட்டு!

Published on 29/05/2020 | Edited on 29/05/2020

 

vszdv


ஜோதிகா நாயகியாக நடித்து, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் எனப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகாவும், சூர்யாவும் இணைந்து தயாரித்து, அறிமுக இயக்குனர் ஜே.ஜே. ஃபெரெட்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் (இன்று) மே 29- ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரையுலகினரும், ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி வரும் நிலையில் நயன்தாரா காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன்  'பொன்மகள் வந்தாள்' படத்தைப் பாராட்டி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
 


''பொன்மகள் வந்தாள் ஒரு கடினமான, நன்கு தயாரிக்கப்பட்ட, புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட படம். படம் முழுவதும் ஜோதிகா ஒரு சாம்பியன் போல் நடித்துள்ளார்! இயக்குனர் ஃபிரெட்ரிக்கிடம் இருந்து ஒரு சிறந்த முதல் படம் இது. ஒரு நுட்பமான தலைப்பை எடுத்து கண்ணியத்துடன் கையாண்டுள்ளார்! நடிகர் சூர்யாவிடமிருந்து மற்றொரு நல்ல படம். பார்த்திபன் அவரது பாத்திரத்தை எளிதாகவும், அதேசமயம் பவர்ஃபுல்லாகவும் செய்துள்ளார். திடமான க்ளைமாக்ஸுடன் சிறப்பாகப் படம் முடிக்கப்பட்டுள்ளது. நன்கு வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் & அனைத்து நடிகர்களிடமிருந்தும் வெளிந்த தரமான நடிப்பு ஆகியவை இந்தப் படத்தை அற்புதமாக்குகின்றன! தியேட்டர் அல்லது ஓ.டி.டி. என எங்கு வெளியாகிருந்தாலும் இந்தப் படம் ஒரு சூப்பர்ஹிட்!'' எனப் பதிவிட்டுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்