Skip to main content

"நல்லவர்களை கதையின் நாயகர்களாக பார்த்து ரொம்ப காலமாச்சு" - வெற்றிமாறன்

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

vetrimaaran speech at viduthalai success meet

 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை பாகம் 1' படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் பார்த்த அரசியல் தலைவர்கள் திருமாவளவன் எம்.பி, சீமான் உள்ளிட்டோர் படக்குழுவினரை பாராட்டியிருந்தனர். 

 

படத்தின் வெற்றியை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து படக்குழுவினர் சக்சஸ் மீட் நடத்தினர். இவ்விழாவில் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பேசினர். அப்போது வெற்றிமாறன் பேசுகையில், "இப்படத்தை மீடியாக்கள் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளனர். அதனால் அனைவரும் கொண்டாடுகிறார்கள். இப்படத்தில் ஆயிரம் குறைகள் இருக்கு. அந்த குறைகள் எல்லாம் விட்டுவிட்டு, இந்த கதை பேசுகின்ற கருப்பொருள் மற்றும் கதையின் நோக்கம் உள்ளிட்ட அம்சங்கள் மட்டுமே ஹைலைட் பண்ணி எல்லா மீடியாக்களுமே ஆதரித்தார்கள். இதனை சிறப்பான விஷயமாக பார்க்கிறேன். அதன் பிறகு மக்கள் இதனை ஏத்துக்கிட்ட விதம். கதாபாத்திரங்களின் வலியை வெவ்வேறு இடங்களில் இருந்து காட்டியிருக்கிறோம். அதனை அவங்களுடைய படமாகக் கொண்டாடுகிறார்கள். மேலும் பெருமையாகவும் பார்க்கின்றனர். 

 

இந்த மாதிரி ஒரு படம் முழுமையாக மெயின்ஸ்ட்ரீம் தளத்தில் இருக்கவில்லை. கதாநாயகன் நல்லவனாக இருக்கிறான். நல்லவர்களை கதையின் நாயகர்களாக பார்த்து ரொம்ப காலமாச்சு. நாங்களே அப்படி பண்ணினது கிடையாது. அப்போ... ஒரு நல்லவனை கதை நாயகனாக காண்பிப்பதை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த மாதிரி விஷயங்கள் மெயின்ஸ்ட்ரீம் டெம்ப்ளேட்டுக்குள் இல்லாமல் இருந்தது. இதை அனைத்தும் மக்கள் ஏத்துக்கிட்டாங்க" எனக் கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்