புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஜிப்மரில் அலுவலக ரீதியான பயன்பாட்டுக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அலுவல் ரீதியான பயன்பாட்டை இந்தியில் மாற்றுவது தொடர்பாக, புதிய சுற்றறிக்கையை ஜிப்மரின் இயக்குநர் வெளியிட்டுள்ளார். அதில், ஜிப்மரின் பதிவேடு மற்றும் கோப்புகளில் இனி வரும் காலங்களில் இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படுமென உத்தரவிடப்பட்டுள்ளது. ஜிப்மர் இயக்குநரின் இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், கவிஞர் வைரமுத்து இதற்கு எதிராக ட்வீட் செய்துள்ளார். அதில்,
"கடைசியில் இந்தி ஜிப்மர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருக்கிறது;
வருந்துகிறோம்
இந்தி படிப்போரை
வெறுக்கமாட்டோம்;
திணிப்போரை
ரசிக்கமாட்டோம்
ஒருமைப்பாடு
சிறுமைப்படாதிருக்க
நாட்டின் பன்மைக்கலாசாரம்
பாதுகாக்கப்படவேண்டும்
சிலர்
நுழைக்கப்பார்ப்பது
ஊசியில் நூலன்று;
ஒட்டகம்
நுழையாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடைசியில் இந்தி
ஜிப்மர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருக்கிறது;
வருந்துகிறோம்
இந்தி படிப்போரை
வெறுக்கமாட்டோம்;
திணிப்போரை
ரசிக்கமாட்டோம்
ஒருமைப்பாடு
சிறுமைப்படாதிருக்க
நாட்டின் பன்மைக்கலாசாரம்
பாதுகாக்கப்படவேண்டும்
சிலர்
நுழைக்கப்பார்ப்பது
ஊசியில் நூலன்று;
ஒட்டகம்
நுழையாது— வைரமுத்து (@Vairamuthu) May 9, 2022