Skip to main content

‘மெகா ஸ்டார்’ படத்திலிருந்து விலகிய த்ரிஷா!

Published on 14/03/2020 | Edited on 14/03/2020

‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தை தொடர்ந்து மெகா ஸ்டார் சிரஞ்சீவி கொரட்டலா சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சிரஞ்சீவியின் மகன் தயாரிப்பு நிறுவனமான கொனிடெலா தயாரிக்கும் இந்த படம் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்து வருகிறது.
 

trisha

 

 

சிரஞ்சீவியின் 152வது படமான இதில் ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக மணிசர்மா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

சமீபத்தில் பட விழா ஒன்றில் கலந்துக்கொண்ட சிரஞ்சீவி இப்படத்தின் பெயர் ஆச்சாரியா என்று மறந்துப்போய் தெரிவித்துவிட்டார். இதற்காக இயக்குனரிடமும் மன்னிப்பு கேட்டு கொண்டார். மேலும் இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், படக்குழு உறுதியாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் நடிகை த்ரிஷா, கருத்து வேறுபாடு காரணத்தால் தான் இந்த படத்திலிருந்து விலகிவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சாமி 2 படத்திலிருந்து விலகும்போதும் இதையே தெரிவித்தார் த்ரிஷா. 

மேலும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்