தமிழ் சினிமாவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அதிகம் வாங்கியவர் கமல்ஹாசன். 'விஸ்வரூபம் 2' படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ள படம் 'விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலரை மே 18-ஆம் தேதி பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் தற்போது ப்ரோமோஷன்களில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தமிழ் நாட்டில் சில ரயில்களின் வெளிப்புற பகுதியில் விக்ரம் படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டு விளம்பரப்படுத்தி வருகிறது. இது குறித்தான வீடியோ ஒன்றை வெளியிட்ட கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் "ரயில்பயணம் எனக்குப் பிடிக்கும். ரயிலில் படப்பிடிப்பு சுலபமானது என்பதால் இன்னும் பிடிக்கும்.என் படங்களில் ரயில்கள் முக்கியமானவை. மூன்றாம்பிறை, மகாநதி, தேவர்மகன் என பல ரயில் காட்சிகள் உங்கள் நினைவுக்கு வரலாம். இப்போது என் படத்தைத் தாங்கிய ரயில்கள் வலம் வருவது மகிழ்ச்சியைத் தருகிறது" என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.
ரயில்பயணம் எனக்குப் பிடிக்கும். ரயிலில் படப்பிடிப்பு சுலபமானது என்பதால் இன்னும் பிடிக்கும்.என் படங்களில் ரயில்கள் முக்கியமானவை. மூன்றாம்பிறை,மகாநதி,தேவர்மகன் என பல ரயில் காட்சிகள் உங்கள் நினைவுக்கு வரலாம்.இப்போது என் படத்தைத் தாங்கிய ரயில்கள் வலம் வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. pic.twitter.com/S07AzG9TCr— Kamal Haasan (@ikamalhaasan) April 28, 2022