Skip to main content

"உங்களின் வாழ்த்து, ஊக்கத்தை அளிக்கிறது" -  முதல்வர் மு.க ஸ்டாலின்

Published on 23/03/2022 | Edited on 23/03/2022

 

tn cm stalin tweet about rajinikanth

 

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது சுயசரிதையை உங்களில் ஒருவன் (பாகம் 1) என்ற பெயரில் எழுதியிருந்தார். கடந்த மாதம் நடைபெற்ற இந்த புத்தக வெளியீட்டு விழாவில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய சுயசரிதை நூலான 'உங்களில் ஒருவன்' புத்தகத்தை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து இந்த புத்தகத்தை படித்த நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். 

 

இந்நிலையில் ரஜினியின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ள முதல்வர் ஸ்டாலின், "உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் பாலகிருஷ்ணா

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
balakrishna to act in jailer 2

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவருக்கான போர்ஷன் படமாக்கப்பட்டு முடிந்து மற்ற நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. 

இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜு இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பறிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் ஏற்கெனவே வெளியாகி பலரது கவனத்தைப் பெற்றது. ஜூன் 10ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

கூலி படத்தை தொடர்ந்து, மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. இதில் கதாநாயாகியாக நயன் தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தில் தெலுங்கு மூத்த நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இவர் முதல் பாகத்தின் போதே நடிக்க பேச்சு வார்த்தை நடந்ததாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தில் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால், கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

“எனது நண்பர் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துக்கள்” - ரஜினிகாந்த்

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
rajinikantha wishes chandrababu naidu

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடந்த வாக்குப் பதிவுகளின் எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டு முடிந்தது. மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும் இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க, தனித்து 240 இடங்களையும் காங்கிரஸ் 99 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது. அதனடிப்படையில் அதிக தொகுதிகளை வென்ற பா.ஜ.க., கூட்டணி கட்சிகளுடன் ஆட்சியை அமைக்க உள்ளது. இதனையொட்டி டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. 

தமிழகத்தை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றுள்ளனர். மேலும் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதியையும் இந்தியா கூட்டணி வென்றுள்ளது. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலத்திலும் பா.ஜ.க. தலமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிப் பெற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் ஒரு தொகுதி கூட வெற்றி பெறவில்லை. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் ரஜினிகாந்த் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, “பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்திருக்கும் தி.மு.க. கூட்டணித் தலைவர், என்னுடைய அருமை நண்பர் ஸ்டாலினுக்கு எனது பாராட்டுக்கள். அதே போல எனது நண்பர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார் அவருக்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும். மத்தியில் என்.டி.ஏ கூட்டணி மூணாவது முறையாக ஆட்சி அமைக்க போகிறது. மோடியும் மூணாவது முறை பிரதமராக பதவி ஏற்க போகிறார். அவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்” என்றார். மேலும் இமயமலை பயணம் குறித்த கேள்விக்கு, “வருஷா வருஷம் போய்ட்டு வரும் இடம்தான். ஆனால் ஒவ்வொரு வாட்டியும் புதுப்புது அனுபவத்தை தரும்” என்றார்.  

ரஜினிகாந்த் கடந்த மாதம் 29ஆம் தேதி இமயமலை பயணம் மேற்கொண்டார். தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலைக்குச் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கும் ரஜினிகாந்த், இம்முறையும் கேதர்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை ஆகிய இடங்களுக்கு சென்றார்.