Skip to main content

'துணிவு, வாரிசு'; திரையரங்க உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கடிதம்

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

Theater owners letter to Tamil Nadu Govt regards thunivu and varisu movie releases

 

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் 'துணிவு' படமும் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் 'வாரிசு' படமும் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அஜித், விஜய் படங்கள்  திரையரங்குகளில் ஒன்றாக வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவி வருகிறது. 

 

ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் சமயத்தில் முதல் மூன்று நாட்களுக்கு வழக்கமான காட்சியைத் தாண்டி சிறப்பு காட்சிகள் ஒதுக்கப்படுவது வழக்கம். இந்த சிறப்பு காட்சி பல முன்னணி ஹீரோக்கள் படங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டாலும் சில ஹீரோக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் இருக்கிறது. 

 

இந்த சூழலில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள 'துணிவு' மற்றும் 'வாரிசு' படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசின் சினிமா துறையைச் சார்ந்த கூடுதல் செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில் "ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை வாரத்தில் தமிழ்நாட்டில் ஒரு கூடுதல் காட்சியை திரையிடுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி வருகிறது. 

 

ஏற்கனவே 14.01.2023 (சனிக்கிழமை), 15.01.2023 (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் விடுமுறை, 16.01.2023 (திங்கட்கிழமை) திருவள்ளுவர் நாள், 17.01.2023 (செவ்வாய்கிழமை) உழவர் நாள் ஆகிய தேதிகளில் ஒரு கூடுதல் காட்சியை நடத்த திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே 12.01.2023, 13.01.2023 மற்றும் 18.01.2023 காலை 9.00 மணிக்கு மட்டுமே அனுமதி கேட்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்