Skip to main content

"உன் சம்பளத்தில் 10 சதவீதம் இல்லாதவர்களுக்கு ஒதுக்க வேண்டும்"  - ஹீரோவுக்கு தங்கர்பச்சான் அறிவுரை

Published on 19/03/2022 | Edited on 19/03/2022

 

thangar bachan advised his son vijith bachan

 

தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் விஜித் பச்சான் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டக்கு முக்கு டிக்கு தாளம்'. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடிக்க, முனீஸ்காந்த், மன்சூர் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தரண்குமார் இசையமைத்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. 

 

இந்நிலையில் முதன்முறையாக திரைத்துறையில் நாயகனாக அறிமுகமாகும் தன்னுடைய மகன் விஜித்க்கு தங்கர்பச்சான் அறிவுரை கூறியுள்ளார். அதில், "“நான் அணிந்திருக்கும் ஆடையை தயாரித்தவர்கள், உண்ணும் உணவை சமைத்தவர்கள், பயணிக்கும் சாலையை அமைத்தவர்கள், குப்பை அள்ளுபவர்கள், நாம் வாழக்கூடிய வீட்டைக் கட்டிக் கொடுத்தவர்கள் இவர்களின் பிள்ளைகள் காலம் காலமாக அங்கேயே தான் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி நினைத்துப் பார். நீ உன்னுடைய ஊதியத்தில் 10 விழுக்காடு அந்த பிள்ளைகளுக்கு ஒதுக்க வேண்டும். இந்த மனநிலைக்கு நீ தயாராகி விடு. நீ செய்வாய், இருந்தாலும் நான் சொல்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக தங்கர் பச்சானை அறிவித்தது பாமக!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Film director Thangar Bachan announced as CM candidate for Cuddalore Parliamentary Constituency

பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக வேட்பாளராக கடலூர் பாராளுமன்றத் தொகுதியில் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் எனப் பல்வேறு முகங்களைப் பெற்றுள்ள தங்கர் பச்சான் போட்டியிடுகிறார் எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பத்திரக்கோட்டை என்னும் கிராமத்தில் பச்சான்-லட்சுமி தம்பதியினருக்கு 1961 ஆம் ஆண்டு 9வது பிள்ளையாகப் பிறந்துள்ளார். இவரது தந்தை மரபு வழி தெருக்கூத்து கலைஞர் ஆவார். இவரது இயற்பெயர் தங்கராசு பின்னர் இவரது பெயருடன் தந்தையின் பெயரை சேர்த்துக்கொண்டு தங்கர் பச்சான் என மாற்றிக்கொண்டார். இவர்  திரைப்படக் கல்லூரியில் ஒளி ஓவியம் கற்று, ஒளி ஓவியர்களிடம் பயிற்சி பெற்று திரைப்பட கலையை அறிந்தவர். இவர் நாவல்கள், சிறுகதை தொகுப்புகள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.

இவரது நூல்களை ஆராய்ச்சி செய்து 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளம் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாட நூலாக உள்ளது. இவர் தமிழ்த் திரையுலகில் அழகி, சொல்ல மறந்த கதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி நடித்துள்ளார்.

இவர் இயக்கி நடித்துள்ள பள்ளிக்கூடம் படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கர் பச்சானுக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், விஜித் பச்சான், அரவிந்த் பச்சான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக பாமக தங்கர் பச்சானை வேட்பாளராக அறிவித்துள்ளது.