விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ள இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து 'தளபதி 67' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த கூட்டணி மீண்டும் 'தளபதி 67' படத்தில் இணைய உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கான பணிகளில் லோகேஷ் கனகராஜ் தனது குழுவுடன் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் 'தளபதி 67' படத்தில் மலையாள படத்தில் நடித்த நாய் ஒன்று விஜய்யுடன் நடிக்கவுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அந்த நாயின் உரிமையாளர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'தளபதி 67' படத்தில் தனது நாய் நடிக்க அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், டிசம்பர் மாதத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#Thalapathy67 Shooting Starts From December 💥 @actorvijay #Varisu pic.twitter.com/URcpf1Mr0b
— Namakkal OTFC (@Namakkal_OTFC) August 29, 2022