Published on 18/01/2022 | Edited on 18/01/2022

கடந்த 2006ம் ஆண்டு சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் வெளியான தலைநகரம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிபெற்றது. இதில் சுந்தர்.சி ஹீரோவாக அறிமுகமானது மட்டுமல்லாமல் ரைட்டு என்ற ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில் தற்போது தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமான 'தலை நகரம் 2' படம் சுந்தர்.சி நடிப்பில் உருவாகவுள்ளது.

சுந்தர்.சி இந்தப் படத்தில் மீண்டும் ரைட்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'தலைநகரம் 2' படத்தின் படப்பிடிப்பு பொங்கலன்று பூஜையுடன் தொடங்கியது. வி.இசட் துரை இயக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.