Skip to main content

“மார்ச் 27க்கு பிறகு படங்கள் விநியோகிக்கப் போவதில்லை”- விநியோகஸ்தர்கள் சங்கம்

Published on 11/03/2020 | Edited on 11/03/2020

நேற்று தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக்குழு கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். 
 

tr distributors

 

 

அந்தக் கூட்டத்தில் இரண்டு புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன அதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது இச்சங்கம்.

 “1. விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகித்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு விதிக்கப்படும் 10% TDS வரியை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக, வரும் மார்ச் மாதம் 27ம் தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை விநியோகிப்பதில்லை என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்படும் TDS வரியை நீக்கும் வரை நடைமுறையில் இருக்கும்.

2. தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான GST (12%) வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு LBT (8%) கேளிக்கை வரி செலுத்துவதால் இது திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது. ஆகையால்  மேற்படி வரியினை (8%) முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்