Skip to main content

பிரபல இயக்குனர் காலமானார்....

Published on 01/12/2018 | Edited on 01/12/2018
robert


பாலைவனச் சோலை, மனசுக்குள் மத்தாப்பு ஆகிய படங்களை இயக்கியவர்கள் இரட்டை இயக்குனர்களான ராபர்ட் மற்றும் ராஜசேகர். இவர்கள் இயக்கிய படங்கள் 1980 களில் வெளியாகி வெற்றி பெற்றன.  ‘ஒரு தலை ராகம்’ படத்தை இவர்கள் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். பின்னர், இருவரும் பிரிந்து தனித்தனியாக படங்கள் இயக்கினார்கள்.
 

அவை சரியாக போகவில்லை. இந்த இரட்டை இயக்குனர்களில் ராஜசேககர் பிரபல சீரியல்களில் நடித்து வருகிறார். ராபர்ட் குளத்தூரில் வசித்து வந்தார். பின்னர் இவர் பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்தவர், இன்று காலை 10 மணிக்கு காலமானார். 

 

 

சார்ந்த செய்திகள்