Skip to main content

''படிக்காதவர்வகளைப் பார்த்து படித்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேண்டுகோள் 

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

உலகமே கொரோனா வைரஸால் ஸ்தம்பித்து போய் உள்ளது. இந்தியாவில் இதன் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து நடிகை தமன்னா கருத்து தெரிவித்துள்ளார். அதில்...

 

gdgds

 

 

''பிரதமர் மோடி அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு என்பது, வரும் அழிவில் இருந்து முன்கூட்டியே நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியாகும். இதை அலட்சியமாக நினைக்க வேண்டாம். நம்மைக் காப்பாற்றுவதற்காகத்தான் இந்த முடிவு. நமக்கான முதல் நல்ல அடியாக இதைப் பார்க்க வேண்டும். நாம் உயிரோடு இருப்பதைவிட எதுவும் முக்கியம் இல்லை. நான் குடும்பத்தோடு வீட்டில் இருக்கிறேன். நீங்களும் இதையே கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நல்ல நிலையில் இருப்பவர்கள் வீட்டில் இருப்பது வேறு. ஆனால் சாதாரண ஏழைகள், படிப்பறிவில்லாத கிராமத்தினர் வீடுகளுக்கு வேலிபோட்டு அவர்கள் வெளியே வராமல், மற்றவர்களையும் ஊருக்குள் வரவிடாமல் தடுத்து வைத்துள்ளார்கள். அவர்களைப் பார்த்தாவது படித்தவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்